Press "Enter" to skip to content

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் விஷால் திரைப்படம்

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் விஷாலின் புதிய திரைப்படம் ஒன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார். 

இந்நிலையில், சக்ரா திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »