Press "Enter" to skip to content

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி காலமானார்.

கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த பழம்பெரும் பெங்காலி நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி (85) மரணமடைந்தார். உலகப் பிரசித்தி பெற்ற இயக்குனர் சத்யஜித்ரேயின் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்கு பத்மபூஷண், தாதா சாகிப் பால்கே உட்பட ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. 

தீன் கன்யா என்ற திரைப்படத்தில் நடத்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது சவுமித்ரா சாட்டர்ஜி பெற்றவர். கடந்த 60 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சவுமித்ரா சாட்டர்ஜி நடித்துள்ளார். கொரோனா வைரஸால் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் சவுமித்ரா சாட்டர்ஜி உயிர் பிரிந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »