Press "Enter" to skip to content

மன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள்…. பாரதிராஜா அறிக்கை

இயக்குனர் பாரதிராஜா, மன்றாடிகேட்கிறோம் மனதுவைங்கள் என்று பேரறிவாளன் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி ராப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் மிகுதியாக பகிரப்பட்டதை அடுத்து ‘வெளியீடு பேர‌றிவாளன்’ என்ற வலையொட்டு (ஹேஷ்டேக்) சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

திரைப்படம் பிரபலங்கள் பலரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என நடிகர்கள் விஜய் சேதுபதி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விஜய் ஆண்டனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை.. ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. 

தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக, ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி ஒரு விடியற்காலை பொழுதுக்காக கண்ணீர் மல்க காத்திருப்பது வேதனைக்குரியது.. மதிப்புக்குரிய ஆளுனர் மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடிகேட்கிறோம் மனதுவைங்கள்.. உடனே விடுதலை தாருங்கள். 

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »