Press "Enter" to skip to content

விஷால், ஆர்யா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிக்கும் எனிமி படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார்.

தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்திருந்தார்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

நேற்று இப்படத்திற்கு எனிமி என்று பெயர் வைத்து தலைப்பு பார்வை விளம்பர ஒட்டியை யும் வெளியிட்டு இருந்தார்கள். தற்போது இப்படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »