Press "Enter" to skip to content

சோனு சூட்டுக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரம்

கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க செயல்களை செய்து வந்த சோனு சூட்டுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். 

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு கைபேசி வாங்கி கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம். 

இந்நிலையில் இவரது மனிதநேயமிக்க சேவைகளை கவுரவப்படுத்தும் விதமாக, ஆந்திராவில் உள்ள சரத்சந்திரா ஐஏஎஸ் அகாடமி, சரத்சந்திரா கல்லூரி, சரத்சந்திரா ஜூனியர் கல்லூரி ஆகியவற்றில், ஒரு துறைக்கு சோனு சூட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.  

இதற்காக தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சோனு சூட் கூறியுள்ளார்

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »