Press "Enter" to skip to content

ரஜினியின் முடிவால் தள்ளிப்போகும் அண்ணாத்த படப்பிடிப்பு?

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது. இதையடுத்து கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் கடந்த 9 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே கடந்த டிசம்பர் 14-ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கியது.  

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர்.

இதையடுத்து ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி சென்னையிலேயே மீதிப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டனர். பிப்ரவரி மாதம் சென்னையில் படப்பிடிப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.  

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்கு படப்பிடிப்பை தள்ளி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு கொரோனா கட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »