Press "Enter" to skip to content

ஜல்லிகட்டு வீரர்களுக்கு ‘மறைந்த யோகேஸ்வரன்’ நினைவாக தங்க காசு – ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு, மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் என்ற இளைஞர் ரெயிலில் ஏறி போராட்டம் செய்த போது எதிர்பாராத விதமாக மின்கம்பியைத் தொட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு மறைந்த யோகேஸ்வரன் நினைவாக தங்க காசு பரிசாக வழங்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “தமிழனின் வீர அடையாளமான இந்த ஜல்லிக்கட்டு காட்சிகளை பார்க்கும்பொழுது ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக உணர்வுரீதியாக போராடியதையும், பல அரசியல் தலைவர்கள் சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றதையும், இந்த மாபெரும் நிகழ்வில் என்னுடைய சிறு பங்கு இருந்ததையும் நினைத்து பார்க்கிறேன். 

போராட்டத்தின் போது தொடர் வண்டி மீது ஏறி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சேலத்தை சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்தின் விருப்பத்திற்காக ஒரு மகன் என்ற நிலையில் இருந்து ஒரு நிலம் வாங்கி வீடு கட்டி தந்துள்ளேன். 

அதோடு இல்லாமல் யோகேஸ்வரனை என்றளவும் நினைவு கூறும் விதமாக இப்பொழுது ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இனிவரும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கும் இனிமேல் ஒவ்வொரு வருடமும் அவன் பெயர் பொறித்த தங்க காசுகளை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளேன்”. என லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »