Press "Enter" to skip to content

7 ஆண்டுகள் நிறைவு… புது வீட்டுக்கு சென்ற நிக்கி கல்ராணி

டார்லிங், மொட்ட சிவா கெட்ட சிவா படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி 7 ஆண்டுகள் நிறைவானதையொட்டி புது வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வெளிவந்த ‘1983’ எனும் மலையாளப் படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அறிமுகமானார் நிக்கி கல்ராணி அதனை தொடர்ந்து பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் திரைப்படத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘டார்லிங்’ படம் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ‘‘யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம், நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, மிகச்சரியாக, சார்லி சாப்ளின் 2, தேவ், கீ,” உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.  

திரையுலகில் 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், புதிய வீட்டிற்கும் குடி பெயர்ந்துள்ளார் நிக்கி கல்ராணி. அடுத்ததாக இவரது நடிப்பில் ராஜவம்சம் திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »