Press "Enter" to skip to content

திரிஷ்யம் 2 படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது.

இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் மறுதயாரிப்பு செய்யப்பட்டது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனா நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பட விளம்பரம் இன்று வெளியானது. மேலும் இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »