Press "Enter" to skip to content

வித்யா பாலன் நடித்த குறும்படம்… ஆஸ்கர் போட்டியில் நுழைந்தது

பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், தயாரித்து, நடித்த நட்கட் என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் நுழைந்துள்ளது.

பெங்காலி படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். அதன்பின் இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் உடல் எடை கூடியதால் சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது வென்ற வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதேபோல் தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்க்ளை கவர்ந்தார்.  

இந்நிலையில், வித்யா பாலன் தயாரித்து நடித்துள்ள, நட்கட் என்கிற குறும்படம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த குறும்படம் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. பாலியல் சமத்துவம் பற்றி பேசியுள்ள இந்த குறும்படம், ஏற்கனவே சிறந்த இந்திய குறும்படத்துக்கான விழாவில் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »