Press "Enter" to skip to content

தல 61 அப்டேட் – 14 ஆண்டுகளுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது. 

இந்நிலையில், இயக்குனர் ஏ.எல்.விஜய் தல 61 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித்தை சந்தித்த ஏ.எல்.விஜய் அவருக்கு கதை சொன்னாராம், அந்தக் கதை அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். ஆதலால் இவர்கள் இருவரும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் ஏ.எல்.விஜய் ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் கிரீடம் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »