Press "Enter" to skip to content

தலைக்கவசம் அணியாமல் சென்று அபராதம் கட்டிய விவேக் ஓபராய்

இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது ஹெல்மட் அணியாததற்கு அபராதம் செலுத்தியுள்ளார்.

இந்தி நடிகர் விவேக் ஓபராய் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் மோட்டார் மிதிவண்டி ஓட்டும் காணொளி ஒன்றை தனது வலைத்தள பக்கத்தில் பதிவேற்றினார்.

இந்த காணொளியில் அவர் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது ஹெல்மட் அணியவில்லை. 

சமூக வலைதளத்தில் வேகமாக பரவிய இந்த காணொளியை கண்ட மும்பை போக்குவரத்து காவல் துறையினர் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மட் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர். சாந்தாகுரூஸ் போக்குவரத்து காவல் துறையினர் இதற்கான ரசீதை அவருக்கு வழங்கினர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »