Press "Enter" to skip to content

உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டிய தவறை சரிசெய்த கர்ணன் படக்குழு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். 

இதனிடையே, நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், கர்ணன் படத்தை பார்த்து பாராட்டியதோடு, அதில் உள்ள தவறையும் சுட்டிக்காட்டி இருந்தார். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அச்சம்பவம் 1997ல் திமுக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என படக்குழு உறுதியளித்திருந்தது.

அதன்படி தற்போது அந்த தவறை கர்ணன் படக்குழு சரிசெய்துள்ளனர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் – இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »