Press "Enter" to skip to content

இந்தி, தெலுங்கு படம் இயக்க ஷங்கருக்கு தடை?

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பாதியில் நிறுத்தப்பட்டு இருப்பதால் இயக்குனர் ஷங்கருக்கு, இந்தி தெலுங்கு படம் இயக்க தடை விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பாதியில் நிறுத்தி விட்டு இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி உள்ளார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி மறுதயாரிப்பை இயக்க உள்ளதாகவும் அறிவித்து உள்ளார்.

இதனை எதிர்த்து இந்தியன் 2 பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வற்புறுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் இருதரப்புக்கும் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஷங்கருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கையாக இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனம் தெலுங்கு, இந்தி திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தில் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷங்கருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கு, இந்தி படங்களை இயக்க அங்குள்ள திரைப்பட வர்த்தக சபையினர் ஷங்கருக்கு தடை விதிக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »