Press "Enter" to skip to content

உலகின் சிறந்த ஆயிரம் படங்களின் பட்டியல் வெளியீடு – முதன்மையான 3-ல் இடம்பெற்ற ‘சூரரைப் போற்று’

பிரபல திரைப்பட மதிப்பீடு மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக மதிப்பீடு பெற்ற முதன்மையான 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் பிரபல திரைப்பட மதிப்பீடு மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக மதிப்பீடு பெற்ற முதன்மையான 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு 9.1 மதிப்பீடு புள்ளிகள் கிடைத்துள்ளது. ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »