Press "Enter" to skip to content

ஊரடங்கில் தளர்வு – திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி

கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன.

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்தன. தற்போது அவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் 21ந் தேதி முதல், அதிகபட்சம் 100 பேருடன் படப்பிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளம்

மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.  

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »