Press "Enter" to skip to content

ஒரே மாதத்தில் வெளியாகும் ஆர்யாவின் 2 படங்கள்

நடிகர் ஆர்யா நடித்துள்ள 2 திரைப்படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர், அடுத்ததாக இயக்கும் படம் எனிமி. இப்படத்தில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா பகைவனாகவும் நடித்துள்ளார். இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

எனிமி, அரண்மனை 3 படங்களின் விளம்பர ஒட்டிகள்

எனிமி படத்தை வருகிற செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஆனால் வெளியீடு தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதேபோல் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ படமும் அதே மாதத்தில் ரிலீசாக உள்ளது. ஒரே மாதத்தில் ஆர்யாவின் இரண்டு படங்கள் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »