Press "Enter" to skip to content

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை

மருத்துவர், அயலான், டான் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் மருத்துவர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், மருத்துவர் படம் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. அதேபோல் அயலான் படமும் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டான் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். ‘ஜாதி ரத்னலு’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய அனுதீப், சிவகார்த்திகேயன் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில், இப்படதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் – ராஷ்மிகா மந்தனா

பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »