Press "Enter" to skip to content

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த கார்த்திக், தற்போது மற்ற நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் நடிகர் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

கார்த்திக்

அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

நடிகர் கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »