Press "Enter" to skip to content

‘பேரு வச்சாலும்’ பாடல் எப்படி உருவானது?… ரகசியம் சொன்ன இளையராஜா

சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் டிக்கிலோனா படத்தில் இடம் பெற்றிருக்கும் பேரு வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

கமல் நடிப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தில் 4 வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இளையராஜா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும்…’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.

இந்த பாடலை சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலில் நடனம் ஆடிய அனகா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகி விட்டார். அப்பாடலில் அவர் நடனமாடியதை மட்டும் சமூக வலைத்தளங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

இந்நிலையில், இந்த பாடல் எப்படி உருவானது என்பதற்கான சுவாரஸ்யமான விளக்கத்தை கொடுத்துள்ளார் இளையராஜா. இப்பாடலுக்கான மெட்டை வாலியுடம் கூறிய போது, இது என்னயா மெட்டு, இதற்கு எப்படி பாடல் எழுதுவது எனக்கேட்டார். அதற்கு ‘துப்பார்க்கு துப்பாய’ குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இப்பாடலை எழுதிவிட்டார் எனக்கூறினேன். அதன் பின்னரே இப்பாடல் உருவானது என இளையராஜா கூறியிருக்கிறார்.

இளையராஜா இந்த பாடல் குறித்து பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »