Press "Enter" to skip to content

கேஜிஎஃப்-2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கேஜிஎஃப்-2 திரைப்படம் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான நிலையில் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி நடிப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி கேஜிஎஃப்-2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கேஜிஎஃப்-2 திரைப்படம் 1,500 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதற்கிடையில், படத்தில் விளம்பரத்தில் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், புகைப்பிடித்தலை ஊக்குவிப்பது போலவும் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

கேஜிஎஃப்-2

இதனால், கேஜிஎஃப் 2 திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று கர்நாடக மாநில உயர்நீதிநீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கேஜிஎஃப்-2 திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகிவிட்டதால் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »