Press "Enter" to skip to content

இந்தியாவில் இவ்வளவு இது நிதி பற்றாக்குறையா…. என்ன செய்ய போகிறது அரசாங்கம்?!!

இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் சென்று, பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.  கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்தில் உள்ளது.

பிரகாசமான நட்சத்திரம்:

உலகம் இந்தியாவை ஒரு பிரகாசமான நட்சத்திரமாக அங்கீகரித்துள்ளது எனவும் நடப்பு ஆண்டிற்கான நமது வளர்ச்சி 7% என மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார் நிதி அமைச்சர்.  தொற்றுநோய் மற்றும் போரினால் உலகளாவிய மந்தநிலை இருந்தபோதிலும் இது அனைத்து முக்கிய பொருளாதாரங்களிலும் மிக உயர்ந்ததாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

காரிப் கல்யாண் யோஜனா:

உணவுப் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை தொடர்ந்து, பிரதமர் காரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து அந்தியோதயா மற்றும் முன்னுரிமை குடும்பங்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தை ஜனவரி 1, 2023 முதல் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார் நிர்மலா சீதாராமன்.

பசியுடன்….:

கோவிட் தொற்றுநோய்களின் போது, ​​28 மாதங்களுக்கு 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்தின் மூலம் யாரும் பசியுடன் படுக்கைக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்தோம் எனவும் கூறியுள்ளார்.

அம்ரித் கால்:

அம்ரித் காலுக்கான எங்கள் பார்வையில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித்துறை ஆகியவை அடங்கும்.  ‘அனைவருக்குமான ஆதரவு
அனைவருக்குமான வளர்ச்சி’ மூலம் வளர்ச்சியை அடைய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

அம்ரித் கால்:

அம்ரித் கால் என்பது நூறாவது சுதந்திர ஆண்டை நோக்கிய பயணம் இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டில் என்பதாகும். 

வாழ்க்கைத் தரம்:

2014 முதல் அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்துள்ளன எனவும் தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  இந்த 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் உலகில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்தில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  வரவு செலவுத் திட்டம் 2023: வருவாய் இரட்டிப்பாகும் விவசாயிகள் நல அறிவிப்புகள்……

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »