Press "Enter" to skip to content

காணொலி காட்சி மூலம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்…

திருப்பத்தூர் | வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உலக சிவனடியார்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐ. ஜி பொன்மாணிக்கவேல் சிவனடியார்களிடம் கோவில்கள் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் அறநிலைய துறையின் செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்.

இதில் வேலூர் அருகே சோழபுரம்(சோழவரம்) என்ற பகுதியில் சோழ மன்னன் கம்பு வர்மன் இறந்த இடத்தில் அவரது மகன் விஜய வர்மன் ஒரு சிவன் கோயில் எழுப்பியுள்ளார். அதற்கு அருகாமையில் ஒரு பெருமாள் கோவிலும் அதற்கு அருகாமையிலேயே ஒரு காளி கோவிலும் இருந்துள்ளது. அவை பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் நிலத்தில் மூழ்கி மூடப்பட்டுள்ளது. அதன் அருகாமையிலேயே ராஜராஜேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | தொழில்நுட்ப வசதியால் தடுத்து நிறுத்தப்பட்ட கடத்தல் சிலை விற்பனை..!

இதனை கட்டியது தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ தேவன் தான் கட்டியுள்ளார். முதலாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டுக்கள், முதலாம் ராஜேந்திர சோழ தேவரின் கல்வெட்டுக்கள் இவையெல்லாம் மண்ணில் புதைந்து உள்ளது. இந்த கோவில்கள் அங்கு இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு பாழடைந்துள்ளது.

இதனை சிவனடியார்களாகிய நாம் முயற்சி செய்து தொல்லியல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று அடையாள சின்னங்களாக அறிவிக்க செய்ய வேண்டும் என்று பேசினார். இதனை தற்போது ஆளுகின்ற அரசு கண்டுகொள்ளவில்லை என நான் கூறவில்லை கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டு கொண்டு இருக்கக்கூடிய எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை என்று பேசினார்.

மேலும் படிக்க | பழங்கால உலோக சிலையை விற்க முயற்சி…! வாடிக்கையாளர் போல் சென்று பிடித்த அதிகாரிகள்…!

 

பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பொன் மாணிக்கவேல் –

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிலைகளை பாதுகாப்பதற்காக அரசு 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சிலை பாதுகாப்பு அறைகளை கட்ட உத்தரவிட்டது.

மேலும் படிக்க | 56 ஆண்டுகளுக்கு முன்பு திருடுப்போன கோவில் சிலை…! அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு…!

இந்த நிலையில் இதுவரையிலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் அறைகள் கட்டப்படாமல் உள்ளது எனவும் ஒரே ஒரு கோவிலில் மட்டுமே சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அறலையத்துறை சார்பில் கோவில் சொத்துக்கள் இணையத்தில் பதிவேற்றி பாதுகாக்கப்படும் என  அரணிலை துறை தெரிவித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பழமையான கோவில்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாகவும் அதன் தொன்மை தன்மையை அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் …என்ன தெரியுமா?

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »