Press "Enter" to skip to content

குரங்கு பொம்மை இயக்குனருடன் இணையும் மக்கள் செல்வன்…

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்று வருகிறது.இதில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், நடிகர் யோகி பாபு, இயக்குநர் ஷான், நடிகை சுபத்ரா, நடிகர் ஹரி உள்பட படக்குழு அனைவரும் பங்கேற்றுள்ளனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டுள்ளார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் மேடையில் பேசுகையில்,

பொம்மை நாயகி இயக்குநர் ஷான் இவ்வளவு பேசுவதை முதல் முறை பார்க்கிறேன். அவருடைய நிதானம் இப்போதுதான் புரிந்தது. திரைப்படம் என்பது ஒரு பயங்கரமான கலை. பரியேறும் பெருமாளில் யோகி பாபு நடித்தது பிடித்திருந்தது. அப்போது இந்த கதையில் யோகி பாபு செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இந்த கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

மேலும் படிக்க | பட்டு வேட்டியில் பட்டையைக் கிளப்பும் சல்மான் பாய்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் விளம்பரம்…

இப்படி ஒரு Sensitive ஆன கதையை உருவாக்கும் போது, நியாயமாக மக்களிடம் கூற வேண்டும் என நினைத்தேன். வணிகம் என்றால் இந்த படத்துக்கு யோகி பாபு தான். அவர் வந்த பின்புதான் இது விரிவடைந்தது. 

நீலம் தயாரிப்பில் ஒரு படம் செய்கிறோம் என்றால் எனக்கு சமூக பொறுப்புகள் உள்ளன. 

சிறிய படங்களை விற்பது சாதாரண விஷயம் கிடையாது. மேலும் ஓடிடியில் விற்கவே முடியாது. அவர்கள் வாங்கும் படங்கள் பெரிய நடிகர்களுடையதுதான். சிறிய படங்கள் வெளியீட்டில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. அதுவும் ஓடிடியை தொடர்பு கொள்ளவே முடியாது. 

மேலும் படிக்க | எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றி வாகை சூடிய பதான்…

திரையரங்கம்தான் ஜனநாயகமான மீடியம் என நினைக்கிறேன். ஆனால் ஓடிடியை நெருங்குவது கடினம். சிறிய படங்களுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிற சூழலில்தான், பொம்மை நாயகி போன்ற படங்களை பெரும் நம்பிக்கையில்  எடுக்கிறோம். 

இந்த படத்தை தயாரித்தது மன நிறைவாக இருக்கிறது என்பதை பெருமையாக கூறுகிறேன். இந்த படத்தில் அனைவரின் நடிப்பும் பேசப்படும். யோகி பாபு நடிப்பில் வேறொரு பரிமாணத்தை பார்க்கலாம். இந்த படம் உங்களை சரியான பாதையில் வழிநடத்தும் என நம்புகிறேன். ஜெய்பீம்.

மேலும் படிக்க | பிறந்த நாளில் உயிரிழந்த நடன கலைஞர்…!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »