Press "Enter" to skip to content

வருகின்ற 5-ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமையன்று மோடி 2.0 இன் ஐந்தாவது வரவு செலவுத் திட்டம் 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.  அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முந்தைய முழு அளவிலான வரவு செலவுத் திட்டத்தில் , இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் சென்று ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.

புதிய வரிகள்:

வரி செலுத்துவோர் மற்றும் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், புதிய வரி ஆட்சியின் கீழ் வரி அடுக்குகளில் பெரிய மாற்றத்தை சீதாராமன் அறிவித்ததுடன் தொடர்வண்டித் துறை மற்றும் மூலதன செலவினங்களுக்கு பெரிய ஊக்கத்தை அறிவித்துள்ளார்.  

வரி இல்லை:

புதிய வரி விதிப்பில் புதிதாக இணைபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை.  புதிய வரி விதிப்பில் வருமான வரி தள்ளுபடி வரம்பை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த அரசு முன்மொழிந்துள்ளது.

புதிய வரி வரம்புகள்:

 

ரூ 0-3 லட்சம் : 0%
ரூ 3-6 லட்சம்: 5%
ரூ 6-9 லட்சம்: 10%
ரூ 9-12 லட்சம்: 15%
ரூ. 12-15 லட்சம்: 20%
ரூ. 15 லட்சத்துக்கு மேல்: 30%

குடியிருப்பு வீடுகளில் முதலீடு செய்யும் மூலதன ஆதாயங்களிலிருந்து விலக்குகளை ரூ. 10 கோடியாகக் குறைக்க அரசு முன்மொழிந்துள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.9 லட்சம் உள்ள தனிநபர் ரூ.45,000 மட்டுமே செலுத்த வேண்டும்.  ரூ.15 லட்சம் வருமானம் உள்ள தனிநபர் ரூ.1.5 லட்சம் வரி செலுத்த வேண்டும்.

அக்னிபாத் வீரர்களுக்கு:

அக்னிபாத் திட்டம், 2022 இல் பதிவுசெய்யப்பட்ட அக்னிவீரர்களால் அக்னிவீர் கார்பஸ் நிதியிலிருந்து பெறப்பட்ட கட்டணம் வரிகளில் இருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.  அக்னிவீரன் அல்லது மத்திய அரசு தனது சேவா நிதிக் கணக்கில் அளித்த பங்களிப்பின் மீது மொத்த வருமானத்தைக் கணக்கிடுவதில் விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   வரவு செலவுத் திட்டம்2023:  ஆற்றல் மாற்றத்திற்கான நிதி ஒதுக்கீடு!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »