Press "Enter" to skip to content

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டிய பிரமிளா!!!

எனது 16வது வயதில் அமெரிக்கா வந்தேன்.  இருப்பினும், அமெரிக்க குடியுரிமை பெற 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்திய வம்சாவளி:

அமெரிக்காவில் மீண்டும் இந்திய மக்கள் தங்கள் கொடியை ஏற்றியுள்ளனர்.  இம்முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால், குடியேற்றம் தொடர்பான ஹவுஸ் ஜூடிசியரி குழுயின் தரவரிசை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.  துணைக்குழுவை வழிநடத்தும் முதல் புலம்பெயர்ந்தவர் இவராவார்.

முதல் தெற்காசிய பெண்:

57 வயதான பிரமிளா ஜெயபால், வாஷிங்டனின் 7வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.  குடிவரவு ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் அமலாக்கத்திற்கான துணைக்குழுவின் பெண் உறுப்பினரான ஜோ லோஃப்கிரெனுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

தரவரிசை உறுப்பினராக நியமிக்கப்பட்ட பிறகு, பிரமிளா ஜெயபால் கூறுகையில், “அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன்.” எனக் கூறியுள்ளார்,

தாமதமான குடியுரிமை:

பிரமிளா கூறுகையில், தனக்கு 16 வயது இருக்கும் போது அமெரிக்கா வந்தேன் எனவும் இருப்பினும், அமெரிக்க குடியுரிமை பெற 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் “உடைந்த குடியேற்ற அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பங்கை நான் ஏற்கும் நிலையில் இருப்பது எனக்கு ஒரு பெரிய விஷயம்,” என்று அவர் கூறியுள்ளார்.  

புலம்பெயர்ந்தவர்களுக்காக:

ஒன் அமெரிக்காவை (முன்னர் ஹேட் ஃப்ரீ சோன்) என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.

 இது வாஷிங்டனின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் அமைப்பாகும்.  செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அவர் அதை உருவாக்கினார்.  அவருக்கு முன்னாள் அதிபர் ஒபாமாவால் மாற்றத்திற்கான சாம்பியன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மோடிக்கு அழைப்பு விடுத்த ஜோ…..அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »