Press "Enter" to skip to content

திரையிடப்பட்ட மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிபிசி ஆவணப்படம்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஈரோடு இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திமுக அரசுக்கு சவால் :

இத்தேர்தல் ஆளும் திமுக அரசுக்கு ஒரு மிகப்பெரிய சவால் என்றே சொல்லலாம். ஏனென்றால், கடந்த 2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 20 மாதங்கள் ஆன நிலையில் அவர்களின் ஆட்சி சிறந்த முறையில் நடந்துள்ளதா என்பது இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமாகவே தெரியவரும் என்பதால், திமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திமுக மும்மரம் காட்டி வருகிறது.

இதையும் படிக்க : 19 சதவீதத்திலிருந்து 22 சதவீதம் உயர்த்த விவசாயிகள் கோரிக்கை…!

காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் :

அதன்படி, இடைத்தேர்தலுக்கான வியூகத்தை வகுத்த திமுக, ஏற்கனவே, ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் இந்த முறையும் தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் – கே ஒதுக்கியது. 

பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

செந்தில் பாலாஜி வாக்குசேகரிப்பு : 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதாித்து திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஈரோடு கல்லு கடைமேடு பகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேரித்தார். அப்போது, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »