Press "Enter" to skip to content

விடுமுறை நாளில் வெறிச்சோடி காணப்பட்ட உதகை ரோஜா பூங்கா…

கடலூர் | விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 900 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஆண், பெண் என 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறன்றனர். 

நூற்றாண்டை கடந்து, செயல்பட்டு வரும், இப் பள்ளியில் பணி புரியும், கணித ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும், அதே பள்ளியில் பணிபுரியும் ஆங்கில  ஆசிரியர் ரேகாவிற்கும், வருகின்ற பிப்ரவரி மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக, சுவரொட்டி ஒன்று சமூக வலைதளத்தில் மிகுதியாக பகிரப்பட்டுி சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

மேலும் படிக்க | தோனி தயாரிக்கும் ‘Let’s get married’.. அதிகாரப்பூர்வ அப்டேட் 

திருமணம் நடைபெறுவதாக கூறப்படும், கணித ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியைக்கு ஏற்கனவே, வேறு நபர்களுடன், திருமணம் ஆகி உள்ள நிலையில், இவ்விரண்டு பேருக்கும் திருமண நடக்கப் போவதாக காலண்டரில் இல்லாத தேதியை வைத்து, மீம்ஸ் கிரியேட்டர் மூலம், சுவரொட்டி வெளியாகி உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் அப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் உட்பட 21 ஆசிரியர்கள் புகைப்படத்துடன் கொண்ட திருமண வரவேற்பு சுவரொட்டி சமூக  வலைதளத்தில் வெளியானதால்,  ஆசிரியர்கள், மற்றும் தலைமை ஆசிரியருடன்,  போலியான திருமண பேனரை, உருவாக்கிய நபர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

மேலும் படிக்க | ஆளுநருக்கு ஆதரவாக ஒட்டப்படட விளம்பர ஒட்டி… 

இந்த பேனரில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் போட்டோக்கள் அனைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட,  EMIS profile record உள்ள புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ஆசிரியர்களின் பாஸ்வேர்ட் இல்லாமல், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட, EMIS profile login-செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் உள்ள நிலையில், எவ்வாறு ஆசிரியரின் புகைப்படம் வெளியே வந்தது எனவும், இத்தனை புகைப்படம் வெளியானதற்கு போலிப் சுவரொட்டி உருவாக்கியவர்கள், மிகப்பெரிய குழுவாக செயல்பட்டு இருக்கலாம் என ஆசிரியர்கள் சந்தேகிக்கின்றனர். 

மேலும் படிக்க | காணாமல் போன வளர்ப்பு நாய்…! விளம்பர ஒட்டி ஒட்டிய உரிமையாளர்..! 

பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த EMIS profile record_ல் உள்ள புகைப்படத்தை  CEO  & DEO அலுவலகம் மூலமாகவோ? அல்லது அப்பள்ளியின் அலுவலகம் மூலமாகவோ? தலைமையாசிரியர் மூலமாகவோ ? 

விருப்பப்பட்ட ஆசிரியர்களின் விருப்பப்படி, பதிவிறக்கம் செய்யப்பட்டு,  போலி திருமண சுவரொட்டி அடித்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த பேனரை மீம்ஸ் கிரியேட்டர் மூலம் தயாரித்து, வெளியே அனுப்பியது யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | மல பயந்துட்டியா மல!!!!! திமுகவினரின் போஸ்டரால் பரபரப்பு 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »