Press "Enter" to skip to content

சட்டம் ஒழுங்கை கண்காணிக்க புது தொழில்நுட்பங்கள்…..

அரசு பள்ளி மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருப்பத்தூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆதியூரில் உள்ள பாண்டியன் பாலிநுட்பம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பொம்மி குப்பம் அரசு பள்ளி மாணவியரும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவியரும் மோதினர். 

மேலும் படிக்க | கழிவுநீர் வாய்க்காலை வெறும் கையால் சுத்தம் செய்த பணியாளர்கள்…

இதில், தனியார் பள்ளி மாணவயிர், போட்டிக்கான சீருடையுடன், காலில் ஷூ அணிந்து, முறையாக பயிற்சி பெற்று பங்கேற்றிருந்தனர். ஆனால் அரசு பள்ளி மாணவியருக்கு, முறையான கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படாமல், உரிய பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, களத்தில் இறக்கி விடப்பட்டது அப்பட்டமாகவே தெரிந்தது. 

காலில் ஷூ கூட இன்றி மாணவியர் வெறும் காலில் பேடைக் கட்டிக் கொண்டு விளையாடியது, மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியது. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி முதன் முதலில் ஸ்டிச் பந்தில் மாணவிகள் விளையாடத் தொடங்கினர்.

மேலும் படிக்க | அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. 2வது நாளாக தொடரும் அவலம்….

தன்னை நோக்கி வரும் பந்தை சமாளிக்க முடியாமல் திணறிய அரசு பள்ளி மாணவி ஒருவரின் நெஞ்சை பதம் பார்த்தது ஸ்டிச் பந்து. துடிதுடித்துப் போன மாணவி அப்படியே கீழே விழுந்தார். 

இது ஒருபுறமிருக்க, பவுளிலிங் செய்தபோது, பந்தை எப்படி பிடிப்பது என்பது கூட தெரியாமல் மாணவியர் திணறியது, காண்போரை நகைப்புக்கு உள்ளாக்கியது. விளையாட்டு மைதானத்தில் தான் முதன் முதலில் மாணவிகள் பயிற்சியே எடுத்தனர் என்பது தெளிவாகவே தெரிந்தது. இதனால், தனியார் பள்ளி மாணவியர் எளிதில் வெற்றி பெற்றனர். 

மேலும் படிக்க | விளைநிலங்களில் பிரேதத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் படும் அவதி…

இவற்றை எல்லாம் பார்க்கும் போது, “விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொண்டதா விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. முறையான பயிற்சிகளுடன், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைப்பதுடன், அசம்பாவிதங்களையும் தவிர்க்க முடியும்.

இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இனியாவது, முறையான பயிற்சியும், உரிய சீருடை, காலணி மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மாணவ, மாணவியரை போட்டிக் களத்தில் இறக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டும் தான் “அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம்” என்பதை மெய்ப்பிக்க முடியும்.

மாலை முரசு செய்திகளுக்கா திருப்பத்தூர் செய்தியாளர் அமுது ஜீவன்…

மேலும் படிக்க | காதலனை திருமணம் செய்ய நாடகமாடிய பெண்…

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »