Press "Enter" to skip to content

13வது சட்டதிருத்தத்துக்கும் தமிழுக்கும் தொடர்பு என்ன…. மக்கள் எதிர்ப்பது ஏன்?!!

துருக்கி, சிரியாவில்  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நிலநடுக்கம்:

கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டா் அளவுகோலில் 7 புள்ளி 8ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியும், அண்டை நாடான சிரியாவும் குலுங்கின.  சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் சில நிமிடங்களில் குடியிருப்புகள் உள்பட பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. 

தற்காலிக குடியிருப்புகள்:

இதன் காரணமாக துருக்கி – சிரியா எல்லைப் பகுதியில், நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கு தற்காலிக முகாம்கள், மருத்துவ முகாம்களை அமைத்து அவர்களை தங்க வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பாதிப்படைந்த சிரியா:

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான மருத்துவமனைகள் இல்லாததால், அங்கு நிலைமை மோசமாக காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. 

உதவிக்கரம்:

மேலும், மக்களுக்கு உதவும் விதமாக பல்வேறு நாடுகளால் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்தவகையில், இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து மீட்பு படையினர் துருக்கிக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், சிரியாவில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த நிலையிலும், 7 வயது சிறுமி தனது சகோதரனை பத்திரமாக ஒன்றரை நாளாக பாதுகாத்து வந்த காணொளி, கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது

இடிபாடுகளில்..:

இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோா் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.  பெரும் கான்கிரீட் சிலாப்களை அகற்றி உயிருக்குப் போராடுவோரை மீட்கும் பணி 4ஆவது நாளாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. 

 

உயிரிழப்பு:

அந்தவகையில், தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 9 ஆயிரத்து 57 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும், சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதையும் படிக்க:   ஆவின் பணி நியமனத்திலும் அதிரடி காட்டிய பி.டி.ஆர்…. அப்படி என்ன செய்தார்?!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »