Press "Enter" to skip to content

3 கடைகளில் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை…

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டம் தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காஞ்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு உணவருந்த வந்து, சமபந்தியில் அமர்ந்த பொதுமக்களுக்கு தன்கையால் உணவு பரிமாற, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா ஆகியோர் மக்களோடு மக்களாக அமர்ந்து கொண்டு உணவருந்தினார்.

மேலும் படிக்க | ஒரு கைபேசி டவர் கூட இல்லாமல் 10 ஆண்டுகள் வளர்ச்சியில் பின்தங்கிய கிராமம்…

விருந்தில் கூட்டு, பொரியல், அப்பளம், வடை, பாயாசம், வாழைப்பழம், என அறுசுவையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது.

பெயரளவிற்கு வந்து அனைவருக்கும் மத்தியில் உணவருந்திவிட்டு செல்லும் பிரமுகர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் என்பதனையும் பாராமல் சமபந்தியில் உணவருந்த வந்து, அமர்ந்த மக்களுக்கு ஆர்த்தி உணவு பரிமாறிய சம்பவம் பொது மக்களிடையே நெகழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல், வட்டாட்சியர் காஞ்சன மாலா, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு உணவருந்தி விட்டு சென்றனர்.

மேலும் படிக்க | நிவாரணம் வழங்கக்கோரி மனு கொடுத்த விவசாயிகள்…

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »