Press "Enter" to skip to content

தேசியக் கட்சியாகுமா ஆம் ஆத்மி….!!!

திருமலை திருப்பதி கோவிலுக்கு  காணிக்கையாக வந்த  வெளிநாட்டு பணத்துக்கு சாியான கணக்கில்லை என மைய கட்டுப்பாட்டு வங்கி அபராதம் வித்துள்ளது. 

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளுரிலிருந்து மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும்  வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். 
வருடப்பிறப்பு, பண்டிகை நாட்கள் , கொடை விழா , போன்ற சிறப்பு மிக்க  நாட்களில்  லட்ச கணக்கான பக்தா்கள் பார்வை செய்துவிட்டு  கோடி கணக்கில் காணிக்கை செலுத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு வரும் பக்தா்கள் வெங்கடாஜலபதியை அா்ச்சனை செய்வதற்காக வாசனை திரவியங்கள், பூ மாலை, தேங்காய்,  பழம்  போன்றவைகளையும் வாங்கி வருகின்றனர் . 

பக்தர்களால் காணிக்கையாக பணம் , நகை , வெளிநாட்டு பணம்  போன்றவை செலுத்துவது வாடிக்கையாக உள்ளது.  தரிசனத்திற்காக வரும் பக்தா்களுக்கு சாப்பாடு , பால் , ஸ்னாக்  வழங்கியும் பின்னா்  அவர்கள் வீடு திரும்புகையில் கவுன்ட்டாில் பிரசாதமாக  லட்டு , பொங்கல் போன்றவையும் கோயில் நிர்வாகத்தால்  வழக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

கோவிலின் கணக்குகளை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம்  கவனித்து வருகிறது. 

  இதில் காணிக்கையாக வரும்  வெளிநாட்டு பணத்தை ரிசா்வ்  வங்கியில் டெப்பாசிட் செய்வற்கு முன்னா் அதற்கான உாிய விளக்கத்தை  ரிசா்வ் வங்கிக்கு அளிக்க வேண்டும்.  அவ்வாறு விளக்கம் அளித்து பின்னரே வெளிநாட்டு பணம் இந்திய பணமாக மாற்றப்படும்.   ஆனால் வெளிநாட்டு பணத்துக்கு   திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் குறிப்பிட்ட யாரையும் சொல்லாமல் பக்தர்கள் மூலம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது  என விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விளக்கத்தை சட்டரீதியாக ஏற்க இயலாத காரணத்தால்  மைய கட்டுப்பாட்டு வங்கி 3 ஆண்டுகள் வைப்பீடு செய்யும் அனுமதியை  நிறுத்தி வைத்ததுடன்  3 கோடியே 29 லட்சம் ரூபாயை  அபராதத் தொகையாகவும் விதித்துள்ளது.

-முருகானந்தம்

இதையும் படிக்க:  இலக்கிய பேராசான் ஜீவானந்தம் பெயரில் விருது வழங்கப்படுமா?!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »