Press "Enter" to skip to content

புகழ்பெற்ற செல்லியரம்மன், காளியம்மன், துர்க்கையம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா…

திருப்பத்தூர் | ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை அர்த்தனாவூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளக் கனியூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பங்களா ராமன். இவரது வாரிசுகளான ராஜம்மாள், கமலா, துரைசாமி, வெங்கடேசன், குமார் ஆகியோர் அனுபவத்தில் உள்ள ஏலகிரி மலை அத்தனாவூர் மேலாய்வு எண் 346, பட்டா எண் 219 கொண்ட – 3.23 ஏக்கர் நிலத்தில் விவசாயம் கடந்த 73 ஆண்டுகளாக  செய்து வருகின்றனர்.  

இந்த நிலமானது 1950 ஆம் வருடம் வெஸ்ஸிபிரவுன் அவர்கள் பங்களா ராமனிடம் வாய்மொழி உத்தரவாக நிலத்தை ஒப்படைத்து விட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு கடந்த 73 ஆண்டுகளாக இதுவரை அவர்களுடைய வாரிசுதாரர்கள் இந்த நிலத்தை உரிமை கோரி வரவில்லை. 

மேலும் படிக்க  | வரும் திங்கட்கிழமை இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? – ஓபிஎஸ் வழக்கு! 

ஆனால் அந்த நிலத்திற்கு போலியாக பட்டா தயாரித்து பதிவு செய்ய கோடியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நலப் பணியாளர் சிவகுமார் முயற்சித்து வருவதாக தற்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், அனுபவத்தில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் விவசாயம் செய்யும் மேற்படி நபர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் பயமுறுத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அவர்களிடமும் மனு அளித்தனர்.   

மேலாய்வு எண் 346, பட்டா எண் 219 கொண்ட இந்த விவசாய நிலத்தை, வேறு யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என்றும், தங்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.  

மேலும் படிக்க  | ஜெயலலிதாவின் புதிய சகோதரரின் மனு….விசாரணைக்கு ஏற்குமா நீதிமன்றம்?!! 

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »