Press "Enter" to skip to content

வேங்கை வயல் விவகாரம் காலம் தாழ்த்தினால் சமூக நீதி அரசுக்கு அழகல்ல – திருமா

தாராபுரத்தில் குப்பைகளை அகற்றாமல், சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில்   கவுண்டச்சி புதூர் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரமேஷ் பகுதி மக்களிடம் வீடு கட்டுவதற்கு குடிநீர் பைப் வழங்க ஒவ்வொரு வீடு கட்டுவதற்கும் பைப் லைன் வழங்குவதற்கும் பத்தாயிரம் முதல் 50 ஆயிரம் வாங்கும்  
செல்வி ரமேஷைக்  கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திருப்பூர் தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி  சார்பாக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சித் தலைவரைக்  கண்டித்து ஊராட்சி அலுவலம் முன்பு மாவட்ட மகளிர் அணி தலைவி மதிவாணி   தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட அமைப்புகுழுத் தலைவர் சங்கர் , ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து உரையாற்றினார்.  அப்போது ஊராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றாமல் இருப்பதால்  நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனக்கூறினார். மேலும்,  சரியான முறையில் குடிநீர் வழங்கிடவேண்டும் என்றும்   ஊராட்சி முழுவதும் தார்சாலைகள் மற்றும் கான்க்ரீட்  சாலைகள் போடவேண்டும்  என்றும் வலியுறுத்தினார். 

தொடர்ந்து, ஊராட்சி தலைவர் செல்வி ரமேஷ்  ஊழல் மட்டுமே  செய்து வருகிறார்.    வேர்ப்புமனு தாக்கல் செய்தபோது அசையும் அசையா சொத்துக்கள் ஒரு லட்சம் மட்டுமே கணக்கில் காட்டியுள்ளார்.  தற்போது அலங்கியம் சாலை அருகில் மெட்ரோசிட்டியில் இரண்டு மனை இடங்கள் வாங்கி இரண்டு கோடி மதிப்பில் புது வீடு கட்டிவருகிறார்.  நரசிங்காபுரம் பகுதியில் மூன்று லட்சம் மதிப்பில் 38சென்ட் இடம் தற்போது வாங்கியுள்ளார் என்று கூறினார்.  

இதையும் படிக்க:.. என்னை சிறையில் அடைக்கலாம்; ஒருபோதும் முடக்க முடியாது – ராகுல்காந்தி பேச்சு!

மற்றும் மாவட்ட ஆட்சியர்  ஊராட்சி ஒப்பந்தம்கள் விட தடைவிதித்துள்ளார், அதனோடு  மூன்று மாதங்கள் முன்பு ஊராட்சி நிர்வாகத்தை கலைக்க உத்தரவும்  போட்டுள்ளார். 

 அதேபோன்று ஊராட்சி தலைவர் அவர்களிடம் கையொப்பம் பெற செல்லும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவாதாகவும் கூறினார். இது குறித்து  உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். 

 மேலும் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றாவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருப்பாளர்கள் ஆயிஷா சுரபி, மணி,  கார்த்திக் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  மாவட்ட பொருளாளர் கொங்கு சிவப்பிரகாசம் இறுதியில் நன்றி கூறினார். 

 இதையும் படிக்க :.. பாஜக பதில் கூற முடியாத கேள்வியை கேட்டதற்காக தான்…ராகுல்காந்தி தகுதி நீக்கம்!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »