Press "Enter" to skip to content

தேர்தல் மும்முரம்: 16 ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

என்னை சிறையில் அடைக்க முடியும் ஆனால் ஒருபோதும் முடக்க முடியாது என்று வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார்.

மோடி சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், ஜாமீனையும் வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து, வயநாடு தொகுதியின் எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு வரும் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

இந்நிலையில் பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வயநாட்டிற்கு ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் வருகை புரிந்துள்ளனர். தொடர்ந்து திறந்த வாகனத்தில் இருவரும் பேரணியாக சென்ற நிலையில், வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பளித்தனர். எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின் முதன் முதலாக வயநாட்டிற்கு சென்றுள்ளார். இருப்பினும் அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : வயநாடு சென்ற ராகுல், பிரியங்கா…வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

தொடர்ந்து வயநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, என்னை சிறையில் அடைக்க முடியும் ஆனால் ஒருபோதும் முடக்க முடியாது என்று தெரிவித்தார். மக்களுக்காக போராடவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணிபுரிய வேண்டும் தவிர பதவிக்காக இல்லை. ஆனால், பாஜக அரசு எம்பி என்பதை பதவியாக மட்டும் பார்ப்பதாலேயே அதனை இழிவாக கருதுவதாக குற்றம் சாட்டினார்.

வயநாடு மக்கள் என்னை குடும்பத்தில் ஒருவனாக பார்க்கின்றனர், வயநாட்டு மக்களுக்காக நான் போராடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. எம்பி என்பது ஒரு தொகுதி தான் – மக்களுக்காக போராடுவதை அப்பதவி தடுக்க இயலாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுக்கு ஒருபோதும் நான் பயப்பட மாட்டேன், வீட்டை அபகரிப்பதன் மூலம் பயமுறுத்த நினைக்கிறார்கள், நாட்டில் எத்தனையோ பேர் வீடு இல்லாமல் இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். என்னை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் வயநாடு தொகுதி மக்களுடன் இருப்பேன் என்று பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார். 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »