Press "Enter" to skip to content

முதியோர் உதவித் தொகை யார் ஆட்சியில் அதிகம்…திமுக-அதிமுக இடையே காரசார விவாதம்!

அதிமுக செயற்குழு கூட்டம் தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இதனால் மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் நாடியதால், அதனை ஏற்று அவரது மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்தன. இவ்வழக்கானது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில்  விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் மேல் முறையீட்டு வழக்குகளில் ஏப்ரல் 20ம் தேதி இறுதி விசாரணை என முடிவு செய்த நிலையில்,  தற்போது  ஏன் முறையீடு செய்யப்பட்டது என ஓ. 

பன்னீர்செல்வம் தரப்பினரை கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், கர்நாடகா தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு செய்வது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து முடிவெடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஏப்ரல் 16ம் தேதி கட்சியின் செயற்குழு கூட்டம் கூட்டப் பட்டுள்ளதாகவும், தங்களுக்கு எதிரான உறுப்பினர்களின், உறுப்பினர் பொறுப்பை புதுப்பிக்க மாட்டார்கள் என்பதால் முறையீடு செய்யப்பட்டதாகவும் மேலும், கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, உறுப்பினர் சேர்க்கை 6 மாதங்களானாலும் முடியாது என்றும்  கட்சியில் என்ன முடிவெடுத்தாலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என ஏற்கனவே நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், கட்சி நடவடிக்கைகளை நீதிமன்ற வழக்குகள் மூலம் இழுத்தடிப்பதாகவும், கர்நாடகா தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு ஏப்ரல் 20 கடைசி நாள் என்பதால் செயற்குழு கூட்டப்பட்டது எனவும் தெரிவித்தனர். 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செயற்குழு தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நீக்கம் உள்பட என்ன முடிவு எடுத்தாலும், அவை மேல் முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்தனர். 

தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் என கட்சி தலைமைக்கு அறிவுறுத்தும்படி கூறிய நீதிபதிகள், ஏற்கனவே முடிவு செய்தபடி, ஏப்ரல் 20, 21ம் தேதிகளில் இறுதி விசாரணை நடைபெறும் எனவும்,  தேவைப்பட்டால் 24ம் தேதியும் கூட விசாரிக்கப்படலாம் எனவும் தெரிவித்தனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »