Press "Enter" to skip to content

அரசு ஒதுக்கிய மயான பாதை: பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி இருளர்கள் மனு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்து வரும் அடைமழை (கனமழை)யாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கிழக்கு திசையில் வீசும் மாறுபட்ட காற்றின் வேகம் காரணமாக தமிழக மற்றும் புதுவையில் மாலை நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை (கனமழை) கொட்டி வருகிறது.

 குறிப்பாக,தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வரும் சூழலில் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட வருகிறது.

இருந்தபோதும், கடந்த மூன்று தினங்களாக மாலை நேரத்தில் அவ்வப்போது அடைமழை (கனமழை) கொட்டித்தீர்த்து வருகிறது.

 இதன் காரணமாக, பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், மாலை நேரங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. 

 இந்த நிலையில், இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த சூழலில், மாலை நேரங்களில் கரு மேகங்கள் சூழ தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை (கனமழை) கொட்டி தீர்த்து வருகிறது.

குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, பண்பொழி, வடகரை, கடையநல்லூர், புளியங்குடி, சொக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது சூரை காற்றுடன் அடைமழை (கனமழை) கொட்டி தீர்த்து வருகிறது.

மேலும், சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக பெய்து வரும் இந்த கன மழையானது இடி, மின்னல்களுடன் கொட்டி தீர்த்து வரும் சூழலில் பொதுமக்கள் மழை பெய்யும் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »