Press "Enter" to skip to content

திருச்சியில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…! உற்சாகத்தில் மக்கள்…!

தன்னுடைய கின்னஸ் சாதனையை தானே முறியடிக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரில்  அழைத்து பாராட்டினார். கேணிக்கரை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மோகனசுந்தரி தம்பதியினரின் மகள் தாரா அக்‌ஷரா இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

இவர் உடலை தேள் வடிவில் வளைத்து விருச்சிகாசனத்தில் ஆறு கண்ணாடி கோப்பைகளில் ஆறு முட்டைகளை வைத்து 7 புள்ளி 88 வினாடிகள் யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்தார். 
இந்நிலையில் இந்த விருச்சிகாசனத்தை ஐந்து வினாடிகள் செய்வதற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதையறிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாணவியை நேரில் அழைத்து பாராட்டினார்.

 ஆறு கோப்பையில் ஆறு முட்டை … 

விருச்சிக ஆசன நிலையில் ஆறு கண்ணாடி கோப்பையில் ஆறு முட்டையை இரண்டு கால்களால் தேள் வடிவில் உடலை வளைத்து லாவகமாக கோப்பையில் வைத்து கின்னஸ் சாதனை படைத்த இரண்டாம் வகுப்பு மாணவி. தனது சாதனையை தானே முறியடிக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியர் பாராட்டு:- 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கேணிக்கரை பகுதியை சேர்ந்த பாலமுருகன் மோகனசுந்தரி தம்பதியினரின் மகள் பா.தாரா அக்ஷரா (7). இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  தனது மூன்றரை வயதிலிருந்து யோகாசனத்தை ஆர்வமுடன் கற்று வரும் மாணவி யோகா கலையின் கடினமான ஆசனங்களை சர்வ சாதாரணமாக செய்யும் வல்லமை மிக்கவராக திகழ்ந்து வருகிறார். 

இதையும் படிக்க;….  தமிழ்நாட்டில் தேரோட்ட திருவிழாக்கள்…. பல்வேறு இடங்களில் பக்தர்கள் வழிபாடு..!

உடலை வில்லை போன்று வளைத்தும் பந்தை போன்று சுழற்றியும்  பல்வேறு ஆசனங்களை செய்யும் மாணவி டிம்பா ஆசனம், விருச்சிக பத்மாசனம், கண்ட பேருண்ட ஆசனா, வீரஹனுமாசனம், துருவாசனா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு ஆசனங்களை செய்து மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை படைத்து சாதனை புரிந்துள்ளார். 

 

தேள் போல உடலை வளைத்து… 

இம்மாணவி  விருச்சிகாசனத்தில் கால்களை பயன்படுத்தி  கோப்பைகளில் அதிவேகமாக முட்டைகளை வைத்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். தேள் வடிவில் உடலை வளைத்து விருச்சிகாசனத்தில் ஆறு கண்ணாடி கோப்பைகளில் ஆறு முட்டைகளை  எடுத்து வைத்து 7.88 வினாடிகளில் புதிய கின்னஸ் சாதனையை படைத்தார்.  இதற்கு முன்னர் இந்த சாதனையை இந்தியாவை சேர்ந்தமாணவி 18.28 விநாடிகளிலும் 2021 ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த வாங்இனோவ் என்பவரின் 11.8 வினாடிகளில் செய்த சாதனையை தாரா அக்ஷரா முறியடித்துள்ளார்.  மாணவி தாரா அக்ஷரா 7.88 விநாடிகளில் தான் செய்த கின்னஸ் சாதனையை 5 விநாடிகளில் செய்வதற்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க;….திருச்சியில் மீன்பிடி திருவிழா கோலாகலம்…! உற்சாகத்தில் மக்கள்…!

 இந்நிலையில் தனது சாதனையை தானே முறியடிக்க தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவி பற்றி அறிந்த   மாவட்ட ஆட்சியர் திருமதி மகாபாரதி மாணவி மற்றும் அவரது குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். ” ஒலிம்பிக்கில் யோகா சேர்க்கப்பட்டால் அதில் தங்கப் பதக்கம் வெல்வது தனது லட்சியம்”,  என்கிறார் மாணவி தாரா அக்ஷரா. 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »