Press "Enter" to skip to content

நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிதி யாருடையது? முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

திருச்சியிலிருந்து  குளத்தூர், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் வழியாக புதுக்கோட்டை செல்லும் ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர்  குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மேப் பூதக்குடியில் காவேரி குடிநீர் குழாய் உடைந்து 50 அடிக்கு மேலாக குற்றால அருவியில் இருந்து கொட்டுவது போல் தற்போது தண்ணீர் கொட்டி வருகிறது. 
இன்று காலை 10 மணியிலிருந்து ஏற்பட்ட உடைப்பானது, தற்போது வரை எந்த ஒரு அதிகாரிகளும் வந்து இந்த குழாயினை சரி செய்யப்படாமல் குற்றால அருவி போல தண்ணீர் வீணாகி வருகிறது.

2007-ம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் விராலிமலை மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளின் குடியிருப்பு வாசிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. இந்த நிலையில் 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்தில் 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளதால் இந்த  வழியில் உள்ள குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்துள்ளது.

இதையும் படிக்க | டைட்டானிக் கப்பலை போல் வீடு கட்டிய கட்டட தொழிலாளி..!இணையத்தில் மிகுதியாகப் பகிரப்படும் புகைப்படம்!!

இந்த குழாய்களில் அவ்வப்போது  வெடிப்புகள் ஏற்பட்டு காவேரி நீரானது வெளியேறி வீணாகி வருகிறது.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெளியேறிய  நீரின் அளவு பல லட்சத்தை தாண்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது வெளியேறும் நீர்  குற்றால அருவி போல் காட்சியளித்து  வருவதால் அந்த பகுதி இளைஞர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தும், அதில் குளித்தும்  வருகின்றனர்.

இதையும் படிக்க | காவிரி, தென்பெண்ணை கர்நாடகத்தின் கழிவுநீர் சாக்கடையா? இழப்பீடு வசூலிக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

கோடை காலங்களில் தண்ணீர் பருகுவதற்கு எத்தனையோ கிலோமீட்டர் பெண்கள் குடிநீரை சுமந்து செல்லக்கூடிய இந்த சூழ்நிலையில் தற்போது வீணாகி வரும் இந்த தண்ணீர் பார்ப்பவர் நெஞ்சை கலங்க வைத்துள்ளது. 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »