Press "Enter" to skip to content

10.5% இடஒதுக்கீடு: முதலமைச்சருக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பிய அன்புமணி!

மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி,  பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மருத்துவ கழிவுகள் அகற்றுவது குறித்து இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ கழிவுகளை குறைந்த கட்டணத்தில் மாநகராட்சி நிர்வாகமே எடுக்க வேண்டும், மற்றும் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலைப்பேட்டையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர ஆய்வகங்களுக்கு மருத்துவக் கழிவுகளை எடுக்க தனியார் நிறுவனத்தால் மாதம்தோறும் வசூலிக்கப்படும் 2000 முதல் 2800 வரையிலான கட்டணத்தை 750 ஆக குறைக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

இதையும் படிக்க | திண்டிவனத்தில் ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் தர்ணா போராட்டம்

இதில் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்திய தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார்.  மேலும் இதில் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

மேலும் அவர்களது இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், கோவை வடக்கு மற்றும் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஆகியோருக்கு மனுவாக அனுப்ப உள்ளனர்.

 இதையும் படிக்க | தர்மபுரியில் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்..!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »