Press "Enter" to skip to content

“ராஜீவ்காந்தி” என்ற பெயரை தவிர்த்து “RGNIYD” என்றே பேசிய மத்திய அமைச்சர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 1958ம் ஆண்டு கட்டப்பட்ட வைகை அணையில் கடந்த மாதம் வரையில் அரசே நேரடியாக மீன்பிடியை நடத்தி வந்தது. அவ்வாறிருக்க, வைகை அணை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்களை கொண்டு மீன்வளத்துறை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது. 

பிடிபடும் மீன்கள் பங்கு அடிப்படையில், பாதி மீனவர்களுக்கும், மற்றொரு பாதி அரசுக்கும் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. வைகை அணையில் பிடிக்கப்படும் ஜிலேபி ரக மீன்களுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும்.  இந்நிலையில் வைகை அணையின் மீன்பிடி உரிமையை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்து, அதற்கான ஏலம் கடந்த மாதம்  சென்னையில் நடைபெற்றது. 

இந்நிலையில், கோவை சேர்ந்த ஒருநபர் ரூ.82 லட்சத்துக்கு வைகை அணை மீன்பிடி உரிமையை பெற்றார். தனியார் வசம் சென்ற வைகை அணையில் கடந்த வாரம் மீன்பிடி தொடங்கப்பட்டது. வைகை அணையில் பிடிபடும் மீன்களில் கட்லா மிருகால் ரோகு வகை மீன்களுக்கு ஒரு கிலோவிற்கு 35 ரூபாயும்,ஜிலேபி ரக மீன்களுக்கு கிழவருக்கு 45 ரூபாயும் கூலியாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு தனியார் நிர்வாகம் வழங்கும் கூலி போதுமானதாக இல்லை என்றும் மீனவர்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் வைகை அணையில் மீன் பிடிப்பதில்அரசு கையாண்ட பழைய நடைமுறையே பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டமீனவர்கள் வைகை அணை நீர்த்தேக்க பகுதியில் தண்ணீருக்குள் இறங்கி  போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அப்போது வைகை அணை மீன்பிடி உரிமையை மீண்டும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். அதன் பின்னர் மீனவர்கள் அனைவரும் தண்ணீரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மீனவர்களின் இந்த போராட்டத்தால் வைகை அணையில் பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வைகை அணை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வைகை அணை மீன்பிடியை அரசை ஏற்று நடத்தும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க } தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் பள்ளம் தோண்டி எடுக்கும் மணல் எங்கே போகிறது…?

இவ்வாறிருக்க,  போராடும்  மீனவர்களுக்கு ஆதரவாக தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக்நிறுவனத் தலைவர் சங்கிலி, மற்றும்  மாவட்ட பொதுச் செயலாளர் பரத்

மற்றும்  சில  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 இதையும் படிக்க } குழாய் போட்டும் ஒரு மாதமாகியும், குடிநீர் வராததால் ஆத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »