Press "Enter" to skip to content

அண்ணாமலை பல்கலைக்கழகம் : தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ராமநாதபுரம், கமுதி, பசும்பொன், கேட்டை  மேடு, அபிராமம், நாராயணபுரம், கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கோடை மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், அய்யம்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், செவிலிமேடு, ஓரிக்கை, உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய அடைமழை (கனமழை) பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதையும் படிக்க : 12 மணிநேர வேலை திருத்த சட்டம்…கண்டனம் தெரிவித்த எடப்பாடி…!

அதேபோல், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனத்தை ஓட்டிச் சென்றனர். இருப்பினும், வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

இதேபோல், கோவை மாவட்டத்தில், லட்சுமி மில்ஸ், உக்கடம், பீளமேடு, தொடர் வண்டிநிலையம், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அதேபோல் புறநகர் பகுதிகளான போத்தனூர், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்தது. இந்த அடைமழை (கனமழை)யால் மிதமான பருவநிலை தென்படுவதால் கோவை பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »