Press "Enter" to skip to content

முறையான குடிநீர் விநியோகம் இல்லை…! அரசு பேருந்தை மறித்து பொதுமக்கள் போராட்டம்…!

ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி தாக்கப்பட்ட சம்பவத்தில்  5 பேர் போலீசா ரால்  கைது செய்யப்பட்ட து அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது காயம் பட்ட மேலாளர் கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்புவதால், குற்றசெயலில் ஈடுப்பட்டவர்களை எதிர்த்து நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு பேரணி பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  வந்த பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசனை கொலை செய்யும் நோக்கத்தோடு மர்ம நபர்கள் இருவர் கேணிக்கரையில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்து ஆயுதங்களை கொண்டு  தாக்க செய்ய முயற்சித்தனர்.

அப்போது அவரது மேலாளர் கணேசன்  தடுக்க முயன்றதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பாஜகவினர் மர்ம நபர்கள் இருவரையும்  மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் காயம் அடைந்த  மூவர்  உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மேலாளர் கணேசன் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது வரை உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கூலிப்படையினர்  மற்றும்  பாஜக நிர்வாகிகள் இருவர், முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன்  மற்றும் வழக்கறிஞர் சண்முகநாதன், ஆர் எஸ் மடையைச் சேர்ந்த விக்னேஷ் என ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாஜக முன்னாள்  மாவட்ட தலைவர் கதிரவன், வக்கில்  சண்முகநாதன்  இருவரும் தலைமறைவாக உள்ளனர்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை நீதிமன்றத்தில் இருவரும் முன் ஜாமின் கோரிய நிலையில். காயம்பட்ட வர் சிகிச்சையில் உள்ளதால் ஜாமின் மனு  தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலாளர் கணேசன் குணமடைந்து விட்டதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் இரவு 10 மணிக்கு மேல்  டிஸ்ஜார்ஜ்   செய்து வீட்டுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறிருக்க,  பாதிக்கப்பட்ட நபரை டிஸ்ஜார்ஜ்  செய்தால் தலைமறைவாக  உள்ள பாஜகவினர் இருவருக்கும் முன் ஜாமின் கிடைத்துவிடும் என்ற அடிப்படையில் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில்   நேற்று  நள்ளிரவில்  சாலை மறியலில் ஈடுபட்டனர். மருத்துவ மனை சாலையில்  மறியல் போராட்டம் செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்  போக்குவரத்து மாற்றம்  செய்தனர்.  மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல உத்தரவிட்டனர்.  

இதையும் படிக்க  }

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
malaimurasu.com/All-unions-strike-on-May-12-against-12-hour-law-amendment” target=”_blank” rel=”noopener”>12 மணி நேர சட்ட திருத்தத்திற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மே 12 இல் வேலை நிறுத்தம்

மேலும்  கணேசன்  தற்போது வரை உள்நோயாளியாக  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாஜக தீவிர ஆதரவாளரான மருத்துவர் மனோஜ்குமார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில்  நிலைய மருத்துவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க உள்ளதாக பாஜக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க  }

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
malaimurasu.com/Handicapped-couples-get-married-for-free-by-the-Department-of-Hindu-Religious-Charities” target=”_blank” rel=”noopener”>மாற்றுத்திறனாளி தம்பதிக்கு…….. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம்….!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »