Press "Enter" to skip to content

தீர்த்தசால் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கங்காதரய்யா கவுடா வீடுகளில் வருமானவரித்துறை சோதனை..!

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன வழக்கில் லஞ்ச புகாரில் கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதிக வட்டி தருவதாக கூறி 84 ஆயிரம் பேரிடம் சுமார் 6 ஆயிரம் கோடி மோசடி செய்த ஐ.எப்.எஸ் நிறுவனத்தின் மீதான விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இவ்வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க டி.எஸ்.பி கபிலன்  5 கோடி ரூபாய் பேரம் பேசி 32 லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ் பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

6000 கோடி ரூபாய் மோசடி செய்த ஐ.எப்.எஸ் நிதி நிறுவன வழக்கை விசாரித்து வந்த அதிகாரி லஞ்ச புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  அதிக வட்டி தருவதாக கூறி 84,000 நபர்களிடம் சுமார் 6000கோடி முதலீடு பெற்று ஏமாற்றிய ஐ.எப்.எஸ் நிறுவனத்தின் மீதான விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 19 பேர் மீது வழக்குபதிவு செய்து நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வழக்கு தொடர்புடைய 31 இடங்களில் சோதனை செய்து 1.12 கோடியும், 34லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், 16 கார்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு சொந்தமான 49 அசையாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஆவணங்களை அமலாக்கத்துறையினர் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க நிர்வாகிகளிடமிருந்து  5 கோடி ரூபாய் பேரம் பேசி 32லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக டி.எஸ்.பி கபிலனிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்ற போது 32லட்ச ரூபாய் லஞ்சமாக பெற்றது தெரியவந்ததையடுத்து, டி.எஸ்.பி கபிலனை பணியிடை நீக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி மோடக் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் லஞ்சம் பெற்ற இவ்வழக்கை லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை நடத்துமாறு பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பரிந்துரை செய்தனர். 

இந்த நிலையில் லஞ்சம் பெற்ற புகாரில் ஐ.எப்.எஸ் விசாரணை அதிகாரி கபிலன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இவ்வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக ஏடி.எஸ் பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல அதிகப்படியான புகார்கள் வருவதால் ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரித்து வந்த ரகுபதி என்பவர் மாற்றப்பட்டு புதிய விசாரணை அதிகாரியாக ஏடி.எஸ்.பி கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க }  தனியார் வசம் சென்ற வைகை அணை மீன்பிடி உரிமை…. அரசே மீன்பிடி நடத்த கோரி மீனவர்கள் போராட்டம் …!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »