Press "Enter" to skip to content

வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் – அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு

பாராளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் 31-ம் தேதி தொடங்க உள்ளது. அதனையடுத்து பிப்ரவரி 1-ம் தேதி மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரை முதல் கட்டமாகவும், மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாம் கட்டமாகவும் பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம், வழக்கமாக நடைபெறும் அலுவலான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி பாராளுமன்ற வளாகத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை நடத்த ஜனவரி 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதே கூட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது. 

இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை அரசுத்தரப்பு கேட்டு, அதற்கேற்ற வகையில் அலுவல்கள் திட்டமிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »