Press "Enter" to skip to content

பெண்ணின் திருமண வயது உயர்வு – முஸ்லிம் லீக், சமாஜ்வாடி எதிர்ப்பு

இந்தியா ஏழை நாடாகும். ஒவ்வொருவருக்கும் தனது மகளை முன்னதாக திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இருக்கும். இதனால் வயதை உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சபிக்குர் ரகுமான் கூறியுள்ளார்.

புதுடெல்லி:

நாட்டில் தற்போது ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. கடந்த சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து பேசினார்.

இந்த நிலையில் பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தப்படுகிறது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

விரைவில் பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இந்த நிலையில் பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21-ஆக உயர்த்துவதற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சமாஜ்வாடி, இடதுசாரிகள், ஓவைசி கட்சி ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் இந்த பரிந்துரையை எதிர்த்து பாராளுமன்றத்தில் முஸ்லிம் லீக் ஒத்திவைப்பு நோட்டீசை அளித்தது.

இது தொடர்பாக அந்த கட்சியை சேர்ந்த மேல்சபை எம்.பி. அப்துல் வகாப் கூறும்போது, பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு மத்திய மந்திரி சபை சமீபத்தில் அங்கீகரித்துள்ளது.

இது அத்துமீறல் செய்வதற்கான முயற்சி என்று நம்புவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன என்றார்.

சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த சபிக்குர் ரகுமான் கூறும்போது, இந்தியா ஏழை நாடாகும். ஒவ்வொருவருக்கும் தனது மகளை முன்னதாக திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இருக்கும். இதனால் வயதை உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட இடதுசாரிகள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் ஓவைசி கூறும்போது, மத்திய அரசின் இந்த முடிவு கண்டனத்திற்குரியது. இது விமர்சனம் அளிக்கக்கூடியது என்றார்.

இதையும் படியுங்கள்…தீரன் திரைப்படம் பாணியில் 25 பவுன் நகை கொள்ளை – மீண்டும் வந்து கொல்வோம் என மிரட்டல்

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »