Press "Enter" to skip to content

ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு…

தமிழகத்தில் கடுமையான நிதிச்சுமை இருந்து வரும் நிலையில்,  ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நிலுவை தொகையை விடுவிக்க முதலமைச்சருக்கு மனமிருந்தாலும், அமைச்சர் பிடிஆர் தான் விடுக்க மறுக்கிறார் என வதந்தி இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருத்தம் தெரிவித்தார்.

மோடியை விட:

மாநில உரிமைகள் குறித்து குஜராத் முதலமைச்சராக இருந்த பொழுது மோடி பேசியதை விட 50% குறைவாக தான் நாங்கள் பேசி வருகிறோம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தலைவா கருத்தரங்கு:

சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் வளர்ந்து வரும் அரசியல் தலைவர்களுக்கான தலைமை பண்பு, அரசு கொள்கை புரிதல், திட்டமிடுதல் மற்றும் செயல்திட்டம் குறித்த தலைவா என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கை தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்து உரையாற்றினார். 

அரசியல் பயணம்:

அரசியல் முன் அனுபவம் இல்லாமல் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது, அதில் முதல் முறையாக வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். தொடர்ந்து, இரண்டாவது முறையாக மீண்டும் 2021ம் ஆண்டு தேர்தலில்,  வாய்ப்பு வழங்கப்பட்டதில் வெற்றி பெற்றேன். பின்னர் முதல் முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

நிதி அமைச்சராக:

அதில் மிக முக்கியமான துறையான நிதித்துறை வழங்கப்பட்டது.  ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிதியமைச்சர்கள் மிக மூத்த தலைவர்களாக, கட்சியில் 2ம் இடத்தில் இருக்கும் தலைவர்களுக்கு தான் வழங்கப்பட்டிருந்தது.  ஆனால் திமுக தலைவர் தனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ளார்.  அதனால் சிறப்பாக செயலாற்ற வேண்டியது எனது கடமை என தெரிவித்த அவர், தற்மோதைய காலகட்டத்தில் அரசியல் வேகமாக மாறி வருகிறது. 

வடமாநிலங்களிலும்:

இளைஞர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர்.  தொடர்ந்து பேசிய அவர், மாநில உரிமை, ஜி.எஸ்.டி தொடர்பாக நான் பேசுவது குறைவு தான்.  ஆனால் இதே கருத்தை குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது இதே கருத்தை அதிகமாக பேசினார்.  குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த பொழுது மாநில உரிமை, ஜிஎஸ்டி பிரச்சினைகள் போன்றவை குளித்து அதிகமாக பேசியுள்ளார். ஆனால், அவர் பேசியதை விட 50% குறைவாக தான் நாங்கள் பேசியுள்ளோம்.  ஹரியானா போன்ற வடமாநிலங்களில் உள்ள மக்களையும் மேம்படுத்த வேண்டும். 

 

பிடிஆரின் நிலைப்பாடு:

தமிழ்நாடு சகோதர சகோதரிகளும் மேம்பட வேண்டும் என்பது தான் என் நிலைபாடு எனவும் கூறிய அவர், தமிழகத்தில் நிதிச்சுமை அதிகமாக உள்ளது.  அதனை சரி செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. அதனால், ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கும் நிதியில் பெரும் பங்கு பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கே செலவாகிறது. 

தவறான வதந்தி:

குறைந்த நிதி மட்டுமே வளர்ச்சி பணிகளுக்காக செலவாகிறது. இதனால்  அரசு துறைகளால் லாபம் ஈட்டுவதற்கு சிரரமாக உள்ளது. இதனை புரிந்துகொள்ளமாமல் ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர்கள் நிலுவைத்தொகையை விடுக்க மனமில்லை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஊக்கத்தொகை வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் என வலியுறுத்தி வருவதோடு, முதலமைச்சர் நல்லவர், அவர் செய்ய மனமிருக்கிறது.  ஆனால், நிதியமைச்சர் பிடிஆர் தான் நிதி வழங்க மறுக்கிறார் என தன் மீது தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர் என அவரே தெரிவித்தார். 

தலைவர்களுக்கான இரண்டு:

அரசியலில் தலைவர்களுக்கு மனிதநேயம், செயல்மிறன் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். இவை இரண்டும் இருந்தால் மட்டுமே மக்களை சந்திக்க முடியும்.  2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் 6 மாதத்திற்கு ஒருமுறை என்ன செய்தேன் என வீடுவீடாக சென்று பிரசுரம் வழங்கினேன் என பெருமையாக தெரிவித்தார். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  குவாரி வழக்கு…. மேற்கொள்ளப்பட்ட திருத்தமும் உத்தரவிட்ட உயர்நீதிமன்றமும்…..

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »