Press "Enter" to skip to content

இந்து பெண்களை கடத்தி இஸ்லாமுக்கு மாற்றி கட்டாய திருமணம்.. பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம்

டெல்லி: இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹலா நகரில் திருமணம் விழாவில் தாலி கட்டும் நேரத்தில் திடீரென கடத்தி செல்லப்பட்ட இந்து பெண், இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் பாகிஸ்தான் இளைஞருடன் அவருக்கு திருமணம் நடந்தது. இந்த விவகாரத்திற்காக பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

சிந்து மாகாணம் மதியரி மாவட்டத்தில். ஹலா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் தாஸ். இவரது மகள் பாரதி பாய்.. 24 வயது பெண்.. இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணம் நடைபெறுவதாக ஊரை கூட்டி விருந்து வைத்து மணகாட்சியை காண அவர்களின் பெற்றோர் ஆர்வமாக இருந்தனர்.

மணப்பெண்ணுக்கு மணமகள் தாலி கட்டும் வைபவம் மட்டுமே நடைபெற வேண்டியிருந்தது. அப்போது திடீரென ஷா ருஹு குல் என்பவர் மண்டபத்துக்குள் போலீசுடன் நுழைந்தார்… மணமகள் பாரதி பாயை போலீஸ் உதவியுடன் அங்கிருந்து கடத்தினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாரதிபாயின் பெற்றோர் போலீசிடம் தெரிவிக்க ஓடினார்கள். அங்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துக்கொண்டிருந்த நேரத்தில் . ஷா ருஹு குல் பாரதியை முஸ்லிம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தங்கள் மகளை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி கல்யாணம் செய்து கொண்டதாக பாரதியின் பெற்றோர் புகார் அளித்துள்ளார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்துள்ள இந்திய அரசு, பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தது. அத்துடன் இந்த விவகாரம் குறித்து விசாரித்து, குற்றவாளிகளை நீதிக்கு கொண்டுவர விரைந்து செயல்படுமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இந்து சமூகத்தை உள்ளடக்கிய அதன் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவதையும் வழங்குவதையும் உறுதிசெய்வது இம்ரான் கான் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் மத்திய அரசு பாகிஸ்தான் தூதரிடம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக பாகிஸ்தானில் இந்து பெண்கள் கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்யும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அங்குள்ள இந்துக்கள் போலீசில் புகார் அளித்து வருவதும் அதிகரித்துள்ளது.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »