Press "Enter" to skip to content

8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு கிளாஸ்.. பள்ளிக் கல்வித் துறை

சென்னை: 8-ஆம் வகுப்பு மாணவர்களு்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என கல்வியாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த முறையை பெற்றோரும் மாணவர்களும் எதிர்த்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த ஆண்டு நிச்சயமாக 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். அடுத்த ஆண்டு இந்த பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

imageமுகத்தை கர்சீப்பால் மூடி.. ரூமில் பணத்தை சிதறவிட்டு.. யார் இவர்.. வெளியானது டோல்கேட் சிசிடிவி காட்சி

இன்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதுகுறித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »