Press "Enter" to skip to content

பொய் சொல்லாதீங்க நிதிஷ்.. பிரசாந்த் கிஷோர் அதிரடி பதிலடி.. பூதாகரமாகும் ஜேடியு சண்டை.. உடைகிறதா?

பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் மற்றும் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு இடையிலான சண்டை பெரிய அளவில் வெடித்துள்ளது. நிதிஷ் குமார் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.

பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த நிறைவேற்றப்பட்டது சட்டமானது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது.

முக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.இந்த மசோதா காரணமாக தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பெரிய அளவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

என்ன எதிர்ப்பு

இந்த சட்டத்தை ஜேடியூ துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்தார். தனது கட்சியையும் மீறி அவர் மசோதாவை எதிர்த்து வந்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பீகாரில் இன்னொரு பக்கம் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சிக்கு இடையிலும் கூட நிறைய குழப்பம் ஏற்பட்டது. அதேபோல் அங்கு ஜேடியூ இரண்டாக உடையும் நிலையும் உருவானது.

imageபிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்

என்ன சாந்தை

கட்சியில் வரிசையாக நிறைய எதிர்ப்பு குரல்கள் எழ தொடங்கியது. மற்ற சில முக்கிய தலைவர்களும் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். வேறு சில தலைவர்களும் நிதிஷ் குமாருக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள், எம்.பி., மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மா நிதிஷ் குமாருக்கு எதிராக கருத்து தெரிவித்தார். நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தை அவர் பொதுவில் வெளியிட்டுள்ளார். இதற்கெல்லாம் காரணம் பிரசாந்த் கிஷோர்தான் என்று கூறப்படுகிறது.

கோபம் பதிலடி

இந்த நிலையில், தற்போது நிதிஷ் குமார் நேரடியாக பிரசாந்த் கிஷோரை விமர்சனம் செய்துள்ளார். அதில், பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருக்க நினைத்தால் இருக்கலாம். அவர் கட்சியை விட்டு போக நினைத்தால் போகலாம். அவர் இப்போதே பல கட்சிகளுக்கு அரசியல் ஆலோசனை வழங்கித்தான் வருகிறார். அவர் கட்சி கொள்கைகளை, விதிகளை பின்பற்றுவது இல்லை. அமித் ஷா சொல்லித்தான் அவரை கட்சியில் சேர்த்தோம். இல்லையென்றால் சேர்த்து இருக்கவே மாட்டோம், என்று நிதிஷ் குமார் குறிப்பிட்டார்.

என்ன பதிலடி கொடுத்தார்

இதற்கு தற்போது பிரசாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், நிதிஷ் பேச வேண்டியதை பேசிவிட்டார். நான் அவருக்கு பதிலடி கொடுப்பேன். நேரடியாக அவரை சந்தித்து பதில் அளிப்பேன். என்னை ஏன் கட்சியில் சேர்த்தேன் என்று ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் அவர். அது முழுக்க முழு பொய். என்னை உங்களுடன் சேர்க்க முயற்சிக்க வேண்டாம். அமித் ஷா சொல்லி என்னை நீங்கள் சேர்த்துஇருந்தால், நான் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். ஆனால் நீங்கள் செய்யவில்லை. அமித் ஷா மூலம் கட்சிக்குள் வந்த ஒருவரை எதிர்க்கும் திராணி எல்லாம் உங்களுக்கு இல்லை. பொய் சொல்லாதீர்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »